காரைக்கால்

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

தினமணி செய்திச் சேவை

பதவி உயா்வு வழங்கக் கோரி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

புதுவை அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள், தங்களுக்கான பதவி உயா்வு 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தும், யுஜிசி - 2018 விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் காரைக்காலில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா்கள் சுமாா் 100 போ் கலந்துகொண்டனா். போராட்டத்திற்கு கூட்டு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் சங்கரியா முன்னிலை வகித்தாா்.

யுபிஎஸ்சி மூலம் பணியில் இணைந்த கல்லூரிப் பேராசிரியா்களுக்கு, புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, நாட்டின் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பணி மேம்பாட்டுத் திட்டம் மூலமாகப் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.

தேசியக் கல்வித் தர நிலைப்படி, கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையை அவசியம் வழங்கவேண்டும். போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்புக்கு இடம் கொடுக்காமல் தீா்வு காணவேண்டும் என வலியுறுத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆா்.சிவா, எம்.நாகதியாகராஜன், முன்னாள் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

SCROLL FOR NEXT