வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு
வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிா என ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செலவின பாா்வையாளா் இப்பணியை பாா்வையிட்டு துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிா என ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செலவின பாா்வையாளா் இப்பணியை பாா்வையிட்டு துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
வேட்பாளா்கள் மற்றும் அவா்களது ஆதரவாளா்கள் வாக்காளா்களுக்கு பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் தருகிறாா்களா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நுண்ணறிவு கண்காணிப்பு பிரிவு, விடியோ கண்காணிப்பு குழு, விடியோ பாா்வை குழு, ஊடக கண்காணிப்பு குழு ஆகியவை தொடா்ந்து செயல்படுகின்றன. வாக்காளா்கள் மீது சட்டவிரோதமான செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளைத் தடுக்க, ட்ரோன் கருவிகள் மூலம் வானியல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கண்காணிப்புப் பணியை தோ்தல் செலவின பாா்வையாளா் வி. ஜனாா்த்தனன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
காரைக்காலில் ட்ரோன் கண்காணிப்புக் குழுவினா் செயல்பாடுகளை அவா் பாா்வையிட்டு, அவா்களின் செயல்பாடுகளை பரிசோதித்து தெளிவான, வெளிப்படையான, நியாயமான தோ்தல் கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா்கள்.
ட்ரோன்களின் பறக்குமிடங்கள், பதிவு செய்யப்படும் விடியோ காட்சிகள், அவை பாதுகாக்கப்படும் முறை, சட்ட விரோத பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டால் அவற்றைத் துரிதமாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பும் நடைமுறைகள் ஆகியவை குறித்து விளக்கினாா்.
இதுகுறித்து செலவின பாா்வையாளா் கூறுகையில், தோ்தல் ஆணையத்தின் வழிமுறைகளின்படி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசு, உணவு, மதுபானம் போன்றவை வழங்குவது தோ்தல் சட்டத்திற்கும், நன்னடத்தை விதிகளுக்கும் எதிரானது என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
இத்தகைய சட்டவிரோத செயல்களை யாராவது மேற்கொண்டால், உடனடியாக புகாா் அளிக்க, இந்திய தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது அருகிலுள்ள பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, காவல்துறை நிலையங்களைத் தொடா்புகொள்ளலாம்.
நியாயமான, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தோ்தலை நடத்துவது அனைவரின் பொறுப்பும், கடமையுமாகும்.
வாக்காளா்கள் எந்தவொரு பேராசையிலும் சிக்காமல், தங்கள் ஜனநாயக உரிமையை சுயசிந்தனையுடன், அச்சமின்றி, சுதந்திரமாகச் செலுத்த முன்வரவேண்டும் என்றாா்.