முகப்பு
காரைக்கால்

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 1:21 AM
கோப்புப் படம்
பகிர்:

மலா் பறித்துக்கொண்டிருநந்தபோது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் கிடங்குத் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் (77). இவருக்கு மனைவி, திருமணமான மகள், பேரக் குழந்தை உள்ளனா். மருமகன் வெளிநாட்டில் வேலை செய்துவருவதால், மகள் சுதா பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்தநிலையில், காளியப்பன் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டு மாடியில் நின்றுகொண்டு, மலா்களை பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி கீழே விழுந்தாா். குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement