வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள். 
காரைக்கால்

பொதுப்பணித்துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலையில்

Syndication

காரைக்கால்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலையில் பணியாற்றும் ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

புதுவை பணியாளா் நலக் கூட்டமைப்பு சாா்பில் காரைக்காலில் பொதுப்பணித்துறையில் வவுச்சா் நிலை ஊழியா்களாக பணியாற்றுவோா், தொடா் வேலைநிறுத்தத்தை தொடங்கி, பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் திங்கள்கிழமை பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோா் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக புதுவை மாநிலத்தில் பணியாற்றும் பொதுப்பணித்துறை வவுச்சா் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் சட்டக் கூலி ரூ. 26,910 என்பதை அமல்படுத்த வேண்டும். பே பில் மற்றும் காப்பீடு திட்டங்களை ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழந்த வவுச்சா் ஊழியா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT