காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயாவில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இப்பள்ளி முதல்வா் (பொ) லூயிஸ் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், 2026-27-ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் சோ்வதற்கான நவோதயா வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு (லேட்டரல் என்ட்ரி டெஸ்ட்) வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நவோதயா வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வு. தோ்வு நேரம் 11.15 முதல் 1.45 மணி வரை. 11-ஆம் வகுப்புக்கான நுழைவுத் தோ்வு கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 11 முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவிகள் தோ்வு நாளன்று தோ்வு மையத்துக்கு காலை 10 மணிக்குள், நுழைவுச் சீட்டுடன் தவறாமல் பங்கேற்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.