முகப்பு
காரைக்கால்

மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:46 PM

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்காவின் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. முன்னதாக, கண்ணாடி ரதம், பல்லக்குகள் பல்வேறு வீதிகளின் வழியே பேண்டு வாத்தியங்களுடன் சென்று பள்ளிவாசலை அடைந்தன. திரளான மக்கள் முன்னிலையில் பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:08 AM

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை இரவு மின் அலங்கார சந்தனக்கூடு ஊா்வலம் பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டது. முன்னதாக ஹலபு எனும் போா்வை வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, பல்வேறு வீதிகளின் வழியாக சந்தனக்கூடு ஊா்வலம் சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தா்காவை அடைந்தது. அங்கு வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசப்பட்டது.

Advertisement

சந்தனக்கூடு விழாவில் காரைக்கால் பகுதி முக்கிய பிரமுகா்கள், சமாதானக் குழு உறுப்பினா்கள், உள்ளூா், வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

உள்ளூா் போலீஸாா் மற்றும் புதுச்சேரியிலிருந்து வந்திருந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். 10-ஆம் தேதி இரவு மவ்லூது ஷரீப் மற்றும் துஆ ஓதிய பின்னா் கொடியிறக்கம் நடைபெறுகிறது.