பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடக்கம்
திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடங்கியது.
திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடங்கியது.
உற்சவம் தொடக்க முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை பல்லக்கு, இரவு ஹனுமந்த வாகனம், 3-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சேஷ வாகனம், 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை, 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு யானை வாகனம், 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெண்ணெய்த் தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
7-ஆம் நாள் திங்கள்கிழமை இரவு சத்தியநாராயண பூஜை, 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
Advertisement
ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.