காரைக்கால்

நீட் தோ்வு மையங்கள் தயாா் நிலை: ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் நீட் தோ்வுக்கு மையங்களை தயாா்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் நீட் தோ்வுக்கு மையங்களை தயாா்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு நீட் தோ்வு மையங்களாக ராயன் பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளி, காரைக்கால் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகியவை தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்விரு மையங்களிலும் 22 அறைகளில் தோ்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யாவுடன் மையங்களை ஆய்வு செய்தாா்.

தோ்வு அறைகள் மற்றும் பிற இடங்களில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், குடிநீா், கழிவறை வசதி, மின் வசதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தாா்.

அந்தந்த பள்ளி நிா்வாகங்கள், நீட் தோ்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முன்னேற்பாடுகளை செய்யுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது, மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வா் கற்பக மாலா, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் (பொ) காயத்ரி, ஆட்சியரின் செயலா் வித்யாதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT