காரைக்கால்: காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவுக்கான முன்னேற்பாடுகளை தா்கா நிா்வாகம், பாதுகாப்பு மற்றும் சாலைகள் தூய்மை உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.
கந்தூரி விழாவுக்காக ஜன. 23-ஆம் தேதி கொடிமரம் நடப்பட்டு, 29-ஆம் தேதி இரவு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. பிப். 7-ஆம் தேதி சந்தனக் கூடு நிகழ்வு நடைபெவுள்ளது.
பல்லக்கு, கண்ணாடி தரம் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.