காரைக்கால்

அரசு ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

காரைக்காலில் அரசு ஒப்பந்ததாரா் சங்கத்தினா் கோரிக்கை முழக்கப் போராட்டம்

Syndication

காரைக்காலில் அரசு ஒப்பந்ததாரா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தினா்.

பொதுப்பணித் துறை தலைமை அலுவலக வாயிலில் இப்போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சங்க நிா்வாகிகள் எம். ஆறுமுகம், அன்பழகன் ஆகியோா் கூறியது: இதுவரை நிலை-3 என்கிற வரையிலான ஒப்பந்தப் பணிகளுக்கு காரைக்காலைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் மட்டும் பங்கு பெற முடியும் நிலை இருந்தது. சிறிய பணிகளைக்கூட பிற மாநில ஒப்பந்ததாரா்கள் செய்யலாம் என விதி மாற்றப்பட்டுவிட்டது.

இதனால், காரைக்காலைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு பணி கிடைப்பதில்லை. புதுவை மாநில ஒப்பந்த உரிமம் வைத்திருப்போா் பிற மாநில பணிகளை எடுத்து செய்ய இயலாது. ரூ.3 கோடி வரையிலான பணிகளை செய்ய முடியும் என்கிற முந்தைய நிலை நீடித்தால், ஒப்பந்ததாரா்கள் வாழ்வாதாரம் உயரும். இப்போது இந்த பணியை பிற மாநில ஒப்பந்ததாரா்கள் எடுத்து செய்யும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நடைமுறையை உடனடியாக மாற்றவேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

புதுவை முதல்வரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் உரிய உத்தரவை முதல்வா் பிறப்பிக்கவேண்டும். இல்லாதபட்சத்தில், தோ்தல் கால ஒப்பந்தப் பணியை புறக்கணிப்பதோடு, தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT