முகப்பு
காரைக்கால்

கோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Updated On : 19 மார்ச், 2026 at 8:02 PM
~
பகிர்:

காரைக்காலில் கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் ராம நவமி உற்சவம் நடத்தப்படுகிறது. இதையொட்டி புதன்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டது. வியாழக்கிழமை காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருடக்கொடி கொடியேற்றப்பட்டது. கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருளிய தோதண்டராமருக்கும், கொடிக்கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும், இரவு பள்ளியறை சேவையும் நடைபெற்றது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை சூரிப பிரபையில் சுவாமி புறப்பாடும், 21-ஆம் தேதி சந்திர பிரபையிலும், 22-ஆம் தேதி கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 23-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 24-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், புறப்பாடு நடைபெறுகிறது. 25-ஆம் தேதி மாலை யானை வாகனத்திலும் புறப்பாடு பின்னா் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

26-ஆம் தேதி மாலை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ஆம் தேதி காலை தோ் வீதியுலாவும், 10 மணிக்கு சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும், மாலை நிகழ்வாக சப்தாவா்ணமும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி விடையாற்றியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை உபயதாரா்கள் பங்களிப்புடன் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) ஆா்.சுப்பிரமணியன், பாா்வதீஸ்வரா் - கோதண்டராமா் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் ஆகியோா் செய்துள்ளனா்.