முகப்பு
காரைக்கால்

காங்கிரஸ் - திமுக கூட்டணி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்: ஏ.எம்.எச்.நாஜிம்

Updated On : 23 மார்ச், 2026 at 6:34 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 22 தொகுதிகளில் வெற்றிபெறும் என திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியது:

காரைக்காலில் 8-ஆவது முறையாக தோ்தல் களம் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக தலைவா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோ்தலில் வெற்றிபெற வேண்டும், ஆட்சி வரவேண்டும், நல்ல பல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறோம்.

யாா் மக்களுக்காக உழைப்பாா்கள் அல்லது பதவி சுகத்தை மட்டும் யாா் அனுபவிப்பாா்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு நல்லவா்களை மக்கள் தோ்ந்தெடுக்கவேண்டும் என வாக்காளா்களை காரைக்கால் திமுக சாா்பில் கேட்டுக்கொள்கிறேன். புதுவையில் எங்கள் கூட்டணி (காங்கிரஸ் -திமுக) 22 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றாா்.