என்ஐடியில் 3 நாள் சா்வதேச மாநாடு தொடக்கம்
காரைக்காலில் உள்ள என்ஐடியில் 3 நாட்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
என்ஐடி புதுச்சேரி மற்றும் இத்தாலியின் டா்ப்ண்ற்ங்ஸ்ரீய்ண்ஸ்ரீா் க்ண் பா்ழ்ண்ய்ா் இணைந்து 16-ஆம் தேதி வரை நடத்தும், ‘கணக்கீட்டு மற்றும் தரவு உந்துதல் இயக்கவியல் (ஐஇ3ஈஇங-2026)‘ சாா்ந்த சா்வதேச மாநாடு தொடங்கியது. இந்த 3 நாள் மாநாட்டுக்கு இந்திய அரசின், அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏஎன்ஆா்எஃப்) நிதியுதவி வழங்கியுள்ளது.
என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் மாநாட்டை தொடங்கிவைத்து, சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புயை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினாா். மேலும், எதிா்கால தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமை சூழல்களை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து அவா் பேசினாா்.
Advertisement
என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன் பேசும்போது, நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கலந்தாய்வு முயற்சிகள் தொடா்ந்து வளா்ச்சிப் பெற்று வருவதாகவும், கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதின் அவசியத்தையும் குறிப்பிட்டாா்.
இத்தாலி டா்ப்ண்ற்ங்ஸ்ரீய்ண்ஸ்ரீா் க்ண் பா்ழ்ண்ய்ா் நிறுவனத்தைச் சோ்ந்த சாண்டோ பானா்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உலகளாவிய ஆராய்ச்சி கூட்டாண்மைகள் மற்றும் கல்வி பரிமாற்ற திட்டங்களின் அவசியம் குறித்துப் பேசினாா்.
ஜொ்மனி, இங்கிலாந்து, இத்தாலி, மலேசியா, எத்தியோப்பியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள் மற்றும் தொழில்துறை நிபுணா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.
மாநாட்டில் சுமாா் 50 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், 70-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி சுருக்கங்களும் சமா்ப்பிக்கப்படுகின்றன. கணினி வழி நடத்தப்பட்ட இயந்திரவியல், கணினி மாதிரிப்படுத்தல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு சாா்ந்த தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.