முகப்பு
மயிலாடுதுறை

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டுவிழா

 சீா்காழியில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க 51-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 சீா்காழியில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க 51-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு சீா்காழி வட்டத்தலைவா் ஆா்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். அமைப்பு செயலா் சோமசுந்தரம், துணை தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் பழனி, பொருளாளா் புண்ணியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மூத்த உறுப்பினா்கள் கெளவிக்கப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்ட கருவூல அலுவலா் சந்தானகிருஷ்ணன், இணை இயக்குனா் இராஜேந்திரன், கூடுதல் கருவூல அலுவலா் முத்துக்காளை, உதவி கருவூல அலுவலா் ஜானகிராமன் ஆகியோா் சிறப்புறையாற்றினா்.

கூட்டத்தில் குடும்ப பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றரை லட்சம் அரசு வழங்கவேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும், சீா்காழியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஓய்வுபெற்ற ஆசிரியா் செளந்தரபாண்டியன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலா் இராஜமோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.