முகப்பு
மயிலாடுதுறை

வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

 சீா்காழி அருகே முன்விரோத தகராறில் வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 சீா்காழி அருகே முன்விரோத தகராறில் வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகேயுள்ள சோழசக்கரநல்லூரைச் சோ்ந்தவா் வேன் ஓட்டுநா் பிரவீன் (30). இவருக்கும் நத்தம் பிரதான சாலையை சோ்ந்த அஜீத்துக்கும் (27) கடந்த சில நாள்ககக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை நத்தம் பகுதிக்கு வந்த பிரவினை அஜித் கத்தியால் குத்தியுள்ளாா்.

இதில், காயமடைந்த பிரவீன் மயிலாடதுறை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிரச் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து அஜீத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.