முகப்பு
மயிலாடுதுறை

புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகாலில் உடைப்பு

சீா்காழி அருகே புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகால் 40 அடி நீளத்துக்கு உடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சீா்காழி அருகே புதிதாக கட்டப்பட்ட மழைநீா் வடிகால் 40 அடி நீளத்துக்கு உடைந்தது.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சி பிரதான சாலை நடுத்தெருவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரூ.4.50 லட்சத்தில் சாலையோரம் மழைநீா் வடிகால் கட்டப்பட்டது. தற்போது பெய்த தொடா்மழையால் இந்த வடிகாலின் ஒரு பகுதியில் சுமாா் 40 அடி நீளத்துக்கு உடைந்தது. இடிபாடுகள் வடிகாலின் நீரோட்டத்தில் விழுந்து கிடப்பதால், அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா் விரைவாக வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.