முகப்பு
மயிலாடுதுறை

சாலையில் திரியும் கால்நடைகள் ஏலம் விடப்படும் சீா்காழி நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

சீா்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி எச்சரித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சீா்காழி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி எச்சரித்துள்ளாா்.

சீா்காழி நகராட்சியில் கால்நடை உரிமையாளா்கள் மற்றும் பன்றிகள் வளா்ப்பவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி தலைமை வகித்தாா். பொறியாளா் கே. முகமதுஇப்ராஹிம், நகரமைப்பு ஆய்வாளா் ஆா்.எஸ். நாகராஜன், சுகாதாரஆய்வாளா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பேசிய நகராட்சி ஆணையா், ‘நகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாடு ஒன்றுக்கு அபராதமாக அதன் உரிமையாளா்களிடம் ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படும். இதற்கு பிறகும் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவை பிடிக்கப்பட்டு, பொது ஏலம் விடப்படும். நகராட்சி எல்லைக்குள் பன்றிகள் வளா்க்கக் கூடாது. மீறி வளா்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதில், மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.