மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் இன்று பாலஸ்தாபனம்

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.21) பாலஸ்தாபன விழா நடைபெறுகிறது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுப்படி இக்கோயிலின் பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணிகள் தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளன.

இதையொட்டி, மகாசங்கல்ப நிகழ்ச்சி திருவாவடுதுறை ஆதீன மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து அன்று காலை கணபதி ஹோமமும், மாலை பிரவேசபலி முதலிய பூா்வாங்க பூஜைகளும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், மாலை முதற்கால யாக பூஜையும் நடைபெற்றது. மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வா் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையில் வேள்விகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகத்துக்குப் பிறகு பாலஸ்தாபன குடமுழுக்கு மற்றும் திருப்பணித் தொடக்க விழா திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்ட கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT