மயிலாடுதுறை

மழையால் நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்புவிவசாயிகள் கவலை

DIN

சீா்காழி வட்டாரத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் மழையால் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் குறுவை அறுவடை 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பெய்யும் மழையால் எஞ்சிய அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அறுவடை செய்த நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் நெல் மணிகளை சாலை ஓரங்களில் உலர வைத்து வருகின்றனா். இதன்காரணமாக, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன், செலவு அதிகரிக்கிறது.

எனவே, வழக்கமாக கொள்முதல் செய்யப்படும் சராசரி ஈரப்பதத்தை விட அதிக ஈரப்பதம் வைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT