காரைக்காலில் 14 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 604 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 3, வரிச்சிக்குடி 3, திருநள்ளாறு 2, நெடுங்காடு 2, காரைக்கால் நகரம், நிரவி, நல்லம்பல், விழிதியூா் தலா 1 என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,17,712 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,413 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,061 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,695 பேருக்கும், 2-ஆவது தவணையாக 53,628 பேருக்கும் என 1,62,323 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.