மயிலாடுதுறை

கதண்டு கடித்து பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 5 போ் மருத்துவனையில் சிகிச்சை

DIN

மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்ததில் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 5 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

தரங்கம்பாடி அருகே கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளி வாசலில் உள்ள வேப்பமரத்தில் கதண்டு கூடுகட்டியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அப்பள்ளி ஆசிரியை மதுராந்தகி (45) பள்ளியில் இருந்து வெளியில் வந்தபோது கதண்டுகள் அவரை கடித்தன.

மேலும், அவ்வழியே சென்ற மேலப்பெரும்பள்ளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி காயத்ரி (34), மகள் கனிஷ்கா (10), மகன் கௌதம் (7) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (20) ஆகியோரையும் கதண்டுகள் கடித்தன. இதில், பாதிக்கப்பட்ட 5 பேரும் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், பள்ளியின் வெளியில் உள்ள வேப்பமரத்திலும், பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு மரத்திலும் கூடுகட்டியுள்ள கதண்டுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT