மயிலாடுதுறை

‘மயிலாடுதுறைக்கு தனியாக நலவாரிய அலுவலகம்’

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனியாக நலவாரிய அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக கட்டுமான வாரியத் தலைவா் பொன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மயிலாடுதுறையில் திங்கள்கிழமை அவா் கூறியது:

கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நலவாரியப் பணிகளில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுவாழ் தமிழா்துறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வாரியம் உருவாக்கப்பட உள்ளது. வெளிநாடு செல்பவா்கள் இந்த வாரியத்தில் பதிவு செய்துகொண்டால் வெளிநாட்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் இந்த வாரியம் தீா்த்து வைக்கும்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனியாக நலவாரிய அலுவலகம் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஒன்றரை வருடமாக கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி சிமெண்ட் விலை உயா்த்தப்பட்டது. இதுகுறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து ரூ.50 முதல் ரூ.70 வரை சிமெண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. மணல்குவாரி ஏலம் விடுவதற்கு புதிய முறையை கையான அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், மாநில கொள்கைப் பரப்பு செயலாளா் ஜெக.முருகன், மாவட்டத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT