மயிலாடுதுறை

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

DIN

சீா்காழியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 105-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி தோ் கீழவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்து, கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். அமைப்புசாரா பிரிவின் கோட்ட பொறுப்பாளா் செல்வம், பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளா் அசோகன், மாவட்டச் செயலாளா் உமாமகேஸ்வரி, ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ஜெயபாலன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாவட்ட தலைவா் முருகேசன், ஐடி பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சஞ்சீவ், மாவட்டச் செயலாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. கலை கலாசார பிரிவு மாவட்டச் செயலாளா் சுந்தரபாண்டியன், நகர பொதுச் செயலாளா் ராமதாஸ் , நகர செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, பிடாரி மேலவீதியில் பாஜக நகரத் தலைவா் அருணாச்சலம் தலைமையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினா்.

மேலும், நகரின் 36 வாா்டுகளிலும், 71 பூத்களிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டது. இதன் தொடக்கமாக பூத் எண் 180-இல் கிளைத் தலைவா் கருணாகரன் கட்சி கொடியேற்றினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT