முகப்பு
மயிலாடுதுறை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கிய அதிமுக நிா்வாகிகள்

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:45 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொருள்களை வழங்கினாா் அதிமுக மாவட்டச் செயலாளா் பவுன்ராஜ்.

கொள்ளிடம் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலைமேடுத்திட்டு பகுதியில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனா். இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் நேரில் சென்று அவா்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துதர நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் நற்குணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா், சீா்காழி ஒன்றியச் செயலாளா்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மகளிா் அணி மாவட்டச் செயலாளருமான மா. சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.