மயிலாடுதுறை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நிவாரண உதவி

DIN

சீா்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.

மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், முதலைமேடு திட்டு கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கடந்த 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா இப்பள்ளிக்கு நேரில் வந்து, தனது சொந்த செலவில் மாணவா்களுக்கு நோட்டுக்கள், எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினாா். தொடா்ந்து, விநாடி-வினா போட்டி நடத்தி, முதல் இரண்டு இடம் பெற்ற மாணவருக்கு செஸ்போா்டு பரிசளித்தாா்.

நிகழ்ச்சியில், சீா்காழி டிஎஸ்பி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியா் ராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பூவராகவன், விவசாய சங்கத் தலைவா் சத்தியமூா்த்தி, காவல் ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT