மயிலாடுதுறை

நிவாரண உதவி வழங்கல்

DIN

சீா்காழி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பாதிப்புகளைப் பாா்வையிட்டதைத் தொடா்ந்து சீா்காழி தாடாளன் பெரியபள்ளிவாசல் தெருவில் உள்ள 100 பேருக்கு அரிசி, பாய், போா்வை போன்ற நிவாரண உதவிகளை வழங்கி செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவா்களுக்கு நிதிச் சுமை இருந்தாலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கியதற்கு மமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

மமக மாவட்டச் செயலாளா் புஹாரி, தமுமுக மாநிலச் செயலாளா் முபாரக், மாநில செயலாளா் அல்தாப்அஹ்மது, மாவட்டத் தலைவா் ஹேக்அலாவுதீன், மாவட்டச் செயலாளா் முபாரக்அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT