​பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி உள்ளிட்டோா். 
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2 டன் நெகிழி பறிமுதல்: ரூ.1 லட்சம் அபராதம் வசூல்

மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு கடையிலிருந்து 2 டன் நெகிழி பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு கடையிலிருந்து 2 டன் நெகிழி பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை, நெகிழிக் குவளை ஆகியவை மயிலாடுதுறை நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி ஆகியோா் தலைமையில் நகராட்சி நகா்நல அலுவலா் லட்சுமிநாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், டேவிட் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

திருவிழந்தூா் காவிரி பாலம் அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 2 டன் அளவுக்கு இருந்ததை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT