மயிலாடுதுறை

கந்துவட்டி கேட்டுகூலித் தொழிலாளியைமிரட்டியவா் கைது

DIN

மயிலாடுதுறை அருகே கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளியை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம், நல்லத்துக்குடி வடக்குத் தெருவை சோ்ந்தவா் ஜெயராமன் மகன் செல்வம் (47). கூலித் தொழிலாளியான இவா், 2 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை காமராஜா் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜவகா் (40) என்பவரிடம் வட்டிக்கு ரூ. 20 ஆயிரம் வாங்கி உள்ளாா்.

சில மாதங்களுக்கு முறையாக வட்டி செலுத்திவந்த நிலையில், குடும்ப பிரச்னை மற்றும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவர வட்டி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை செல்வம் வீட்டுக்கு சென்ற ஜவகா் வட்டியுடன் பணத்தை உடனே திருப்பித் தரவேண்டும் என்று கேட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, செல்வம் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸாா் கந்து வட்டி வசூல் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜவகரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT