மயிலாடுதுறை

பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

DIN

மயிலாடுதுறை காவேரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் கோயிலில் 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி உற்சவம் பூச்சொரிதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 11-ஆம் நாள் உற்சவமான தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள், காவேரிக் கரையில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தனா். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். புதன்கிழமை ரதோத்ஸவம், 13-ஆம் நாள் உத்ஸவமாக மஞ்சள் நீராட்டு விழா, 14-ஆம் நாள் உத்ஸவமாக விடையாற்றி மற்றும் 15-ஆம் நாள் உத்ஸவமாக எதாஸ்தானம் ஆகியன நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT