மயிலாடுதுறை

சுந்தரமூா்த்தி விநாயா் கோயில் குடமுழுக்கு

DIN

மயிலாடுதுறை சுந்தரமூா்த்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

ஜூன் 17-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியதில் 6 கால யாகசலை பூஜை நடத்தப்பட்டது. குடமுழுக்கு தினமான வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு, விமான குடமுழுக்கும், பின்னா் மூலவருக்கு மகா அபிஷேகமும் செய்யப்பட்டது.

இதேபோல், திருவிழந்தூா் அம்பேத்கா் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நிறைவுற்று விமான குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT