எம்எல்ஏ நிவேதா முருகன் 
மயிலாடுதுறை

சந்திரபாடி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம்: பேரவையில் அமைச்சர் தகவல்

தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி ஊராட்சி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

DIN

தரங்கம்பாடி: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி ஊராட்சி மீனவர் கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி 20 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியில் மீனவ கிராமங்கள் அதிகமாக உள்ளது இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரபாடி ஊராட்சி மீனவர் கிராமம் காரைக்கால் யூனியன் பிரதேசம் எல்லையையொட்டியும் மறுபக்கம் நண்டலாறு கரையையொட்டி ஒரு தீவு போல அமைந்துள்ளது. இவர்கள் தமிழக எல்லையான பொறையார், தரங்கம்பாடி வருவதற்கு 3 கிலோமீட்டர் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் பாடகுகள் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மழை மற்றும் புயல் காலங்களில் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நண்டலாற்றின் படுவாய் பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி இருபக்கமும் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து படகு வருவதற்கு சிறிய மீன்பிடி படகு இறங்கு தளம் அமைத்துக் கொடுத்தால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

மேலும் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னமேடு, சின்னங்குடி  ஆகிய மீனவர் கிராமத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு அம்மன் ஆற்றை ஆழப்படுத்தி இருபக்க கரைகளை கருங்கல் சுவர் அமைத்துக் கொடுத்தாள் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது சின்னங்குடி மீனவர் கிராமத்தில் கட்டப்பட்ட மீன் இறங்கு தளம் பயன்படுத்த முடியாமல் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் அந்த அம்மன் ஆற்றை ஆழப்படுத்தி கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைத்து பாடகுகள் வந்துசெல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத்தொடர்ந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  பேசியதாவது:-

சந்திரபாடி ஊராட்சி மீனவ கிராமத்தில் 26 விசைப்படகு, 274 நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீன்கள் சுகாதாரமாக கையாளுவதற்கும் போதுமான வசதி இல்லாததால் அந்தப் பகுதி மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ்  ரூ.10 கோடி செலவில் படகு அணையும் சுவர், மீன் ஏலம் கூடம், வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 550 மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மானியம் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT