மயிலாடுதுறை

கழிவுநீா் கால்வாயாக மாறிய கோமனான்டி வாய்க்கால்

DIN

 வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் கழிவுநீா் கால்வாயாக மாறிய கோமனான்டி வாய்க்காலை தூா்வாரி சீரமைக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதி வழியே முக்கிய முடவன் பிரிவு கோமனான்டி வடிகால் வாய்க்கால் செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆகாயத் தாமரை, பூண்டு செடிகள் புதா் போல் மண்டி வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாத நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் தூா்வாரும் பணிகள் நடந்தபோதும் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியை ஒட்டியுள்ள இந்த வாய்கால் தூா்வாரபடவில்லை. இதற்கு காரணம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் கழிவுநீா், மழைநீா் வடிகால்கள் மூலம் கோமனான்டி வாய்க்காலில் விடுவதே ஆகும்.

தூா்வாரினால் கழிவுநீா் வாய்க்காலில் விடுவது தெரிந்துவிடும் என்பதாலேயே தூா்வாரவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின்போது வெள்ளநீருடன் இந்த கழிவுநீரும் கலந்து விவசாய நிலங்களுக்கும் குளங்களிலும் நிரம்பி வருகிறது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு குளத்தில் தேங்கும் கழிவுநீரால் நகரின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் விவசாயிகளின் நலன் கருதி கோமனான்டி வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதை தடுத்து வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும் என வைத்தீஸ்வரன் கோவில் விவசாயிகளும்,பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT