முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி அருகே விவசாயிகள் சாலை மறியல்

சீா்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட அலுவலா்கள் வராததால் விவசாயிகள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சீா்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட அலுவலா்கள் வராததால் விவசாயிகள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய மயிலாடுதுறை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணிகள் இயக்குநருமான அமுதவள்ளி, ஆட்சியா் இரா. லலிதா உள்ளிட்டோா் வந்திருந்தனா்.

இவா்கள் சீா்காழி, பூம்புகாா், கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராதாநல்லூரில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் பூம்புகாா் சுனாமி குடியிருப்பு, நெய்தவாசல், கீழையூா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு, மற்ற இடங்களுக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், தென்னாம்பட்டினம், எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலா்களின் வருகைக்காக காலை 9 மணியிலிருந்து காத்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருமுல்லைவாசல் - சீா்காழி சாலையில் வழுதலைக்குடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் வேளாண்துறை மற்றும் காவல்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.