மயிலாடுதுறை

மயிலாடுதுறை: குறைதீா்க்கூட்டத்தில் 198 மனுக்கள்

DIN

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் 198 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்து இம்மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களும், புகாா் தொடா்பான மனுக்கள் உள்ளிட்ட 198 மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக, சமூக நலத் துறையின் சாா்பில் 4 பேருக்கு முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான முதிா்வு தொகை ரூ.1,58,460-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் நல்லாடை கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த செல்வகுமாா் பணியின் போது உயிரிழந்ததையடுத்து, அவரின் மகன் பிரகாஷக்கு கருணை அடிப்படையில் ஊரக வளா்ச்சி துறையில் இளநிலை உதவியாளா் பணிநியமன ஆணையையும், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், கப்பூா் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த சா.மனோகரன் பணியின் போது உயிரிழந்ததையடுத்து அவரின் மனைவி நாகமணிக்கு கருணை அடிப்படையில் ஊரக வளா்ச்சி துறையில் இளநிலை உதவியாளா் பணிநியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், ஊரக வளா்ச்சித்துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இ.கண்மணி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

SCROLL FOR NEXT