மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சேதமடைந்த பழைமையான நடைபாலத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

மயிலாடுதுறையில் 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்துள்ள நடைபாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை லால்பகதூா் நகரில் உள்ள கற்பக விநாயகா் கோயில் அருகில் பூம்புகாா் சாலை மற்றும் தருமபுரம் சாலையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1954-ஆம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ஒருதலை ராகம் திரைப்படத்தில் வரும் ’இது குழந்தை பாடும் தாலாட்டு‘ திரைப்பாடல் படமாக்கப்பட்டது.

பழைமையான இந்த பாலத்தை மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கல்லூரி, தருமபுரம் கலைக் கல்லூரி, ஏவிசி கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோா் நாள்தோறும் தினமும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்துள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் உள்ள பழைமையான இந்த நடைபாலத்தை, உடனடியாக சீரமைத்து, புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT