மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் செப்.12-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

DIN

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் செப்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை ஏழுமலையான் தனியாா் தொழிற்பழகுநா் பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் செப்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஐடிஐ பயிற்சி பெற்றவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

மேலும் 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவா்களை நேரடியாக தொழிற்சாலைகளில் ஊழ்ங்ள்ட்ங்ழ் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங் ஆக சோ்த்து 3 முதல் 6 மாத கால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநா் சான்றிதல் பெறலாம். இப்பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் பணியாற்ற பயனுள்ளதாக அமையும். மேலும் தகல்களுக்கு உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை. தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT