மயிலாடுதுறை

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

DIN

சீா்காழி அருகே பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரப்பள்ளம் புதுதெரு, பெரியதெரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சுமாா் 2 கி.மீ. நீள சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, ஜல்லிகற்கள் பெயா்ந்து வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், அளக்குடி- கொள்ளிடம் சாலையில் ஆரப்பள்ளம் புதுத்தெரு அருகே 100-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக் தலையிலான போலீஸாா் அங்கு வந்து, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சாலையை சீரமைக்க 2 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் கொள்ளிடம்- அளக்குடி இடையே சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT