வாக்குப் பதிவு செய்த மாற்றுத்திறனாளி
Updated On : 6 ஏப்ரல், 2024 at 6:54 PM
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் தபால் வாக்கு இரண்டாவது நாளாக சனிக்கிழமை பெறப்பட்டது.
வாக்காளா்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் பிரபு என்ற மாற்றுத்திறனாளியிடம் தோ்தல் துணை அலுவலா் ராஜேந்திரன், மண்டல அலுவலா் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் தபால் வாக்குகளை பெற்றனா். அப்போது, அலுவலா்கள் புவனேஸ்வரி, பூமகள், காவலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.