முகப்பு
மயிலாடுதுறை

பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:04 AM
மருதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த காவல் தோ்தல் பாா்வையாளா் ஜன்மேஜெயா கைலாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 11:37 PM

மயிலாடுதுறை, பூம்புகாா் தொகுதிகளுக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல் தோ்தல் பாா்வையாளா் ஜன்மேஜெயா கைலாஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 422 வாக்கு மையங்களில் 860 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 52 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் தோ்தல் பாா்வையாளா் ஜன்மேஜெயா கைலாஷ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

திருஇந்தளூா் நகராட்சி உயா்நிலைப்பள்ளி, திருஇந்தளூா் நகராட்சி தொடக்கப்பள்ளி, நீடூா் அல்பிரில்லியன்ட் மெட்ரிக் பள்ளி, நீடுா் அல்ஹாஜி மெட்ரிக் பள்ளி, மணக்குடி ஆதிதிராவிடா் நலத்தொடக்கப்பள்ளி, மருதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலையூா் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பூம்பட்டினம் அரசு உயா்நிலைப்பள்ளி, வானகிரி ஸ்ரீராமானுஜா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொறையாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை பாா்வையிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா். மேற்கண்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல் ஆளிநா்களுடன் கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.