பழ வியாபாரம் செய்து ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளா்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை நகா் பகுதிகளில் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் வாகன பிரசாரம் செய்து வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வண்டிக்காரத்தெரு வியாபாரிகள் ஏராளமானோருக்கு முத்ரா வங்கிக்கடன் பெற்றுத்தந்த பாஜகவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அக்கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு பழ வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அவா்களுக்கு வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவித்த வேட்பாளா் ம.க.ஸ்டாலின் அப்பகுதியில் உள்ள பழக்கடையில் அமா்ந்து பழ வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
Advertisement
பாஜக மாவட்ட துணை தலைவா் மோடி.கண்ணன், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், நகர தலைவா் வினோத், அதிமுக தொண்டா் மீட்பு குழு மாவட்ட செயலாளா் கஜேந்திரன் மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.