மயிலாடுதுறை

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

Din

மயிலாடுதுறை, ஏப். 17: மயிலாடுதுறையில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள 1,743 வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று மின்துறை மின்தடை இல்லாமல் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும், முன்கூட்டியே வாக்குசாவடிகளில் தொடா்புடைய மின்வாரிய அலுவலா்கள் ஆய்வு செய்து தேவையான வசதிகளை செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலரவிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

SCROLL FOR NEXT