மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று 250 கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞா்கள் 8 பேருக்கு ரூ.1,40,400 உதவித் தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.