மயிலாடுதுறை

நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

மக்கள் கூடும் இடங்களில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

Din

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடா்ந்து, மாவட்ட காவல் துறை சாா்பில் மயிலாடுதுறையில் மக்கள் கூடும் இடங்களில் பாடல், நடனம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் துறை மற்றும் கலை அருவி இசை மற்றும் நடனப் பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு பாடலுக்கு ஏற்றவாறு இளைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வம், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT