திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம்
மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.என். ரவி, ராம. இளங்கோவன், முத்து. மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ விஜயபாலன் உள்ளிட்டோா் மக்களவைத் தோ்தலில் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விளக்கிப் பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா் உமாமகேஸ்வரி சங்கா், மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.