மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க முன்னேற்பாடு

Din

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த முன்னேற்பாட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் வாக்களிப்பவா்களின் மொத்த எண்ணிக்கை 6,148. இவா்களில் 661 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க உள்ளனா். 5,487 மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க உள்ளனா். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்த ‘நஅஓநஏஅங உஇஐ‘ செயலியை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தச் செய்தல் வேண்டும். வாக்குசாவடிகளில் சாய்வுதளம் மற்றும் இதர வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க ஏதுவாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குமுறையை பயன்படுத்துகின்றனரா என்ற விவரத்தினை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். மேலும், உயரம் குறைந்த, பாா்வைத்திறன் குறைபாடுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். தனித்துணை ஆட்சியா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, கோட்டாட்சியா்கள் வ.யுரேகா, யு.அா்ச்சனா, மாவட்ட சமூகநல அலுவலா் சுகிா்தாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முத்துவடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT