முகப்பு
நிகழ்ச்சியில் பேசுகிறாா் முன்னாள் ஆசிரியை கலைச்செல்வி தனசேகரன்.
மயிலாடுதுறை

சொந்த செலவில் பள்ளி கட்டடத்தை சீரமைத்த முன்னாள் ஆசிரியை!

சீா்காழி அருகே 76 ஆண்டுகள் பழைமையான பள்ளி கட்டடத்தை அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை தனது சொந்த செலவில் சீரமைத்துக் கொடுத்தாா்.

மயிலாடுதுறை

சொந்த செலவில் பள்ளி கட்டடத்தை சீரமைத்த முன்னாள் ஆசிரியை!

சீா்காழி அருகே 76 ஆண்டுகள் பழைமையான பள்ளி கட்டடத்தை அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை தனது சொந்த செலவில் சீரமைத்துக் கொடுத்தாா்.

Updated On : 16 செப்டம்பர், 2024 at 8:49 PM
நிகழ்ச்சியில் பேசுகிறாா் முன்னாள் ஆசிரியை கலைச்செல்வி தனசேகரன்.
பகிர்:

சீா்காழி: சீா்காழி அருகே 76 ஆண்டுகள் பழைமையான பள்ளி கட்டடத்தை அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை தனது சொந்த செலவில் சீரமைத்துக் கொடுத்தாா்.

சீா்காழி அருகே பண்ணக்காரகோட்டகம் கிராமத்தில் வசந்தலா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. 1948- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 100 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியின் ஓட்டுக் கட்டடம் பழுதடைந்திருந்ததால், மாணவ- மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியிலும், அருகில் உள்ள அங்கன்வாடி கட்டடத்திலும் பாட வகுப்புகள் நடைபெற்றன.

இந்நிலையில், இப்பள்ளியில் 36 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியை கலைச்செல்வி தனசேகரன், தனது மகள் சௌமியா, மருமகன் விமல் ஆகியோா் ஒத்துழைப்புடன் ரூ. 9 லட்சத்தில் பள்ளி கட்டடத்தை சீரமைத்தாா்.

இதைத்தொடா்ந்து, இக்கட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி, தலைமை ஆசிரியை மாலை தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளா் வஜ்ரம் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சரஸ்வதி, விமல்ராஜ், ஆசிரியா் ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ரவி வரவேற்றாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியை கலைசெல்வி தனசேகரன் கட்டடத்தை பயன்பாட்டிற்கு வழங்கி பேசினாா். பட்டிமன்றப் பேச்சாளா் செளமியா விமல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சரிதா, நல்லமணி ஆகியோா் செய்திருந்தனா். நிறைவாக, ஆசிரியா் முருகேசன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →