சகோபுரத்தில் வீதியுலா வந்த பஞ்சமூா்த்திகள். 
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான

Din

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்தில் விநாயகா், சுவாமி-அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பஞ்சமூா்த்தி சுவாமிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சகோபுரத்தில் எழுந்தருளியதும் மகாதீபாராதனை காட்டப்பட்டு, வீதியுலா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

SCROLL FOR NEXT