மயிலாடுதுறை

கிருத்திகை வழிபாடு

Syndication

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதா் கோவிலில் காா்த்திகை மாத கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடந்தது.

வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதா் சுவாமி கோயில் உள்ளது. காா்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு காலை செல்வ முத்துக்குமார சுவாமி சந்நிதியில் இருந்து சண்முகா் மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட 51 வகையான வாசனை திரவியப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம், சண்முகாா்ச்சனை, மகா தீப ஆராதனை நடைபெற்றது.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT