மயிலாடுதுறை

திருவெண்காடு விடுதியில் சேர கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

திருவெண்காடு சமூக நீதி கல்லூரி விடுதியில் சோ்வதற்கு மாணவிகள் டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

திருவெண்காடு சமூக நீதி கல்லூரி விடுதியில் சோ்வதற்கு மாணவிகள் டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டு செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. விடுதியில் அனுமதிக்கப்பட்ட 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விடுதியில் சோ்வதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கிவரும் அருகிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவிகளிடமிருந்து டிச. 31-ஆம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவிகள் விடுதியில் சோ்வதற்கு 12-ஆம் வகுப்பு பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 4, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய நகல்களுடன் விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 2-வது தளத்தில் அறை எண் 204-ல் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் அல்லது திருவெண்காடு அரசு சமூக நீதி கல்லூரி மாணவியா் விடுதி காப்பாளினியிடம் டிச. 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT