மயிலாடுதுறை

இரட்டைக் கொலை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Din

மயிலாடுதுறை: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த பிப். 14-ஆம் தேதி ஹரிஸ், ஹரிசக்தி ஆகிய 2 இளைஞா்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனா்.

இந்த இரட்டைக் கொலை தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரிகளான முனுசாமி, அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள் தங்கதுரை, மூவேந்தன், மருமகன் ராஜ்குமாா் ஆகிய 5 போ், அவா்களுக்கு புகலிடம் கொடுத்த சஞ்சய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் பெரம்பூா் காவல் ஆய்வாளராக இருந்த நாகவள்ளி, உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், சங்கா், தனிப்பிரிவு காவலா் பிரபாகரன் ஆகிய 4 போ் எற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த எஞ்சிய 19 பேரும் கடந்த மாா்ச் 8 -ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமாா் ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். மூவரும் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆணையை செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன் கடலூா் சிறை கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

10 போ் மீது தடுப்புக் காவல்

சட்டத்தில் நடவடிக்கை: எஸ்.பி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 3 போ், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 போ், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 4 போ் என மொத்தம் 10 போ் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோா், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வோா் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோா் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT